Monday, 10 December 2012

ரஜினி பிறந்த நாள் விழா இடம் மாற்றம்

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் 12.12.12 பிறந்த தின விழாவை வள்ளுவர் கோட்டத்தில் நடத்த அரசு அனுமதி மறுத்துவிட்டது. எனவே இந்த விழாவை வரும் டிசம்பர் 13-ம் தேதி சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடத்துகிறார்கள் ரசிகர்கள். 

சென்னை மாவட்ட தலைமை ரசிகர் மன்றம் சார்பில் நடக்கும் இந்த விழா முதலில் வள்ளுவர் கோட்டத்தில் நடப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் அனுமதி மறுக்கப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது. 

எனவே மாற்று இடமாக ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தை மன்ற நிர்வாகிகள் கேட்டுப் பெற்றனர். விழாவுக்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக தொடர்ந்து நடந்து வருகின்றன. விழாவுக்கான அழைப்பிதழ் மற்றும் போஸ்டர்கள் ஏற்கெனவே சென்னையை அலங்கரிக்கத் தொடங்கிவிட்டன. 

நாளை முதல் நாளிதழ்களிலும் வெளியாக உள்ளன. இத்தகவல்களை சென்னை மாவட்ட தலைமை மன்ற நிர்வாகிகள் என் ராமதாஸ், ஆர் சூர்யா, கே ரவி, சினோரா அசோக் மற்றும் சைதை ரவி ஆகியோர் தெரிவித்தனர். courtesy:123tamilcinema 

கமலுக்கு முழு ஆதரவு

சென்னை: விஸ்வரூபம் படத்தை டிடிஎச்சில் வெளியிடும் கமலின் முடிவுக்கு முழு ஆதரவு அளிப்பதாக பிலிம்சேம்பர் மற்றும் கேயார் அணி அறிவித்துள்ளது. கமல் முடிவு குறித்து விவாதிக்க, தயாரிப்பாளர்களில் ஒரு பிரிவினர் இன்று கேயார் தலைமையில் தயாரிப்பாளர் சங்கத்தில் கூடினர். கூட்டத்தின் முடிவில் நிருபர்களைச் சந்தித்த கேயார் கூறுகையில், “கமல் திறமைசாலி. விஞ்ஞானம் புரிந்தவர். 

அந்த வளர்ச்சியின் பின்னால் போய்க்கொண்டிருப்பவர்.அப்படிப்பட்டவர் இப்போது எடுக்கும் இந்த முயற்சி நிச்சயம் தப்பாக இருக்காது. தயாரிப்பாளர்களுக்கு புதிய வழியில் ஒரு வருமானத்தை கொடுக்கக்கூடிய சூழல் இந்தப் படத்தால் உருவாக்கியுள்ளது. நாங்களெல்லாம் ஓவர்சீஸ் என்று சொல்லப்படுகிற வெளிநாட்டு பட வியாபாரம் பற்றித் தெரியாமல் இருக்கும் போது அவர், தனது அபூர்வ சகோதரர்கள் படத்தை வெளிநாடுகளில் தனித்தனியாக விற்று பணம் சம்பாதித்துக் காட்டினார். 


இன்றைக்கு அந்த வழியைத்தான் எல்லா தயாரிப்பாளர்களும் பின்பற்றி நல்ல பணம் சம்பாதிக்கிறார்கள். இன்றைக்கு பெரிய தயாரிப்பு நிறுவங்கள் கூட வருமானமின்றி தடுமாறுகின்றன. அவர்களுக்கு இந்த டிடிஎச் ஒளிபரப்பு முறை பெரிய ஆறுதலாக இருக்கும். எனவே அவரது இந்த முயற்சிக்கு எங்களுடைய ஆதரவு உண்டு. சென்ற ஆண்டு தமிழில் 128 படங்கள் ரிலீஸ் ஆகியது. அதேபோல இந்த ஆண்டு இதுவரை 148 படங்கள் ரிலீஸ் ஆகியிருக்கின்றன. 


ஆனால் அந்த 148 படங்களில் வெறும் 8 படங்கள் தான் ஹிட்டாகி இருக்கின்றன. அப்படி ஹிட்டான படங்களுக்கும் கூட சரியான லாபம் வந்து சேரவில்லை. டி.டிஹெச்சில் ரிலீஸ் செய்வதால் ரசிகர்கள் தியேட்டருக்கு வர மாட்டார்கள் என்று ஏற்றுக் கொள்ள முடியாது. 


கண்டிப்பாக எல்லா படங்களையும் வீட்டில் சின்ன திரையில் பார்க்க முடியாது. அதேபோலத்தான் இந்தப் படத்தையும் ஒரு சின்னத்திரையில் பார்த்து சந்தோஷப்பட்டு விட முடியாது. கண்டிப்பாக இந்தப் படத்தை தியேட்டரில் போய் பார்க்க ரசிகர்கள் வருவார்கள். எங்களுடன், பிலிம்சேம்பரும் இணைந்து கமலை ஆதரிக்கிறது,” என்றார்.

Friday, 23 November 2012

சிவாஜி 3 டி வெளியீடு - ரஜினியின் பிறந்த நாள் பரிசாக


சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்த நாள் பரிசாக, ச3 டியில் உருவாகியுள்ள சிவாஜி – தி பாஸ் படம் வெளியாகும் என்று ஏவி எம் நிறுவனம் அறிவித்துள்ளது.
ரஜினி, ஸ்ரேயா ஜோடியாக நடித்து 2007-ல் ரிலீசான ‘சிவாஜி’ படத்தை தற்போது 3டி தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இரு வருடங்களாக சென்னையில் உள்ள ஸ்டுடியோக்களில் 400 க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப கலைஞர்கள் இதற்கான பணிகளில் ஈடுபட்டனர். ரூ 17 கோடி பட்ஜெட்டில் இந்த 3 டி வடிவம் தயாரானது.
சமீபத்தில் இதன் பாடலும், டிரெய்லரும் வெளியிடப்பட்டன. ரஜினி இதில் பங்கேற்று 3டி கண்ணாடி அணிந்து பார்த்து மகிழ்ந்தார். 3டியில் வரும் முதல் ரஜினி படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படம் ரஜினி பிறந்த நாளையொட்டி அடுத்த மாதம் 12-ந் தேதி (12.12.12) தமிழகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்படும் என்று படத்தை தயாரித்த ஏ.வி.எம். நிறுவனம் அறிவித்துள்ளது. வெளிநாடுகளிலும் அதே நாளில் படத்தை வெளியிடுகின்றனர். 1000 தியேட்டர்களுக்கு மேல் திரையிடப்படுகிறது.
Courtesy:123tamilcinema.com 

Tuesday, 20 November 2012

ஓடி ஒளியும் அமலாபால் |


வீரசேகரன், சிந்து சமவெளி, மைனா படங்களில் நடித்து வந்தநேரம், மீடியாக்களைத்தேடி அமலாபால் ஓடிக்கொண்டிருந்தார். ஆனால் இப்போதோ, யாராவது மீடியாக்காரர்கள் வருகிறார்கள் என்றால் ஓடி ஒளிகிறார். ஏன் என்ன காரணம்? என்று அவரைக்கேட்டால், என்னை சந்திப்பவர்கள் ஒருவர்கூட நான் என்னென்ன படங்களில், எந்த மாதிரி கேரக்டர்களில் நடிக்கிறேன் என்று கேட்பதில்லை. வந்த வேகத்தில டைரக்டர் விஜய்யை நான் காதலிப்பதாக சொல்லி, அந்த காதல் எப்போது கல்யாணத்தில் முடியப்போகிறது என்றுதான் கேட்கிறார்கள். தெய்வத்திருமகள் என்ற ஒரு படத்தில்தான் அவருடன் நடித்தேன். அதன்பிறகு இப்போது விஜய் சாரை அவர் இயக்கும் படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறேன். இதற்கிடையே ஓரிரு முறைதான் நாங்கள் சந்தித்திருக்கிறோம். ஆனால் நாங்கள் ரகசியமாக காதலிப்பதாக செய்தி எழுதுகிறார்கள். இப்போது கல்யாணம் வரை வந்து விட்டார்கள்.
டைரக்டர் விஜய்யுடன் நான் கொண்ட நட்பை இப்படி காதல் கீதல் என்று கொச்சைப்படுத்துவது மனதுக்கு ரொம்ப வேதனையாக உள்ளது. அதனால்தான் சமீபகாலமாக மீடியாக்களை சந்திக்க பிடிக்கவில்லை. விழாக்களுக்கு செல்லும இடங்களில்கூட யாராவது மீடியாக்காரர்கள் வந்திருந்தால், ஓடி ஒளியும் மனநிலையில் இருக்கிறேன் என்கிறார் அமலாபால்.
courtesy:123tamilcinema.com